வாயிற்கதவை திறந்த மாறனார் அங்கு வயது முதிர்ந்த ஒரு சிவனடியாரை கண்டு வியப்படைந்தார் . ஸ்வாமி இந்த மழையில் தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? . உள்ளே வாருங்கள். உள்ளே வந்து இந்த ஈர உடைகளை களைந்து வேறு ஆடைகளை அணியுங்கள் . அதற்குள் உணவு தயாராகிவிடும் என்று உபசரிக்கிறார் . அத்தகைய இக்கட்டிலும் சிவனடியார் ஒருவர் உணவு அருந்த வந்ததில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி . வந்தவர் நானொரு யாத்திரீகன் . ஊர் ஊராய் சுற்றி வருபவன் . இந்த ஊர் வந்தபோது பெரும் மழை பிடித்து கொண்டது . பசி வாட்டுகிறது . இந்த ஊரில் எல்லோரும் உன் வீட்டில் ஒரு போதும் பசி என்று வந்தவர்கள் உண்ணாமல் போனதே கிடையாது என்று என்னை இங்கே அனுப்பினார்கள், என்று கூறினார் . மாறனார் உடனே உள்ளே அமருங்கள் உணவு தயாரானதும் அருந்தலாம் என்று உபசரித்தார் .
No comments:
Post a Comment