மாறனாருக்கு சோதனை காலம் துவங்கியது .. வயலில் விளைச்சல் குறைய ஆரம்பித்தது . ஆனால் அவருடைய விருந்தோம்பல் குறைவில்லாமல் தொடர்ந்தது . கையிலுள்ள செல்வம் கரைந்தது . வீட்டிலுள்ள பண்டங்கள் காசாக மாறி விருந்தோம்பல் தொடர்ந்தது . எல்லா பொருளும் தீர்ந்ததும் அக்கம்பக்கத்தில் கைமாறாக பணம் வாங்கி சில நாட்கள் தொடர்ந்தது . சோதனையாக இரண்டு நாட்கள் விடாமல் அடைமழை பெய்து கணவன் மனைவி இருவரும் பட்டினி கிடைக்க நேர்ந்தது . இருவரும் பட்டினியுடன் படுத்தனர் . நடு நிசியில் வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்த மாறனார் கதவை திறந்தார் .
No comments:
Post a Comment