சிவபெருமான் அழகிய வாலிபனாக மாறினார் . மிக்க தேஜஸுடன் சிவனடியார் உடைகளுடன் காண்போரை கவரும் வண்ணம் இயற்பகையார் வீட்டின் முன் நின்றார் . இயற்பகையார் வெளியே வந்தார் . உடனே 'தாங்கள்தான் இயற்பகையார் என்பவரா ? தங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . தாங்கள், சிவனடியார்கள் எதை யாசித்தாலும் மறுக்கமால் தருவீர்கள் என்று ' என வினவினார் . இயற்பகையார் மிக பணிவுடன் பதிலுரைத்தார் "என்னிடம் உள்ள எல்லாம் அந்த ஈசன் அளித்ததே . ஆக அதை அவரடியார்களுக்கு கொடுத்து மிஞ்சியதே என்னை சாரும் . ஆகையால் தங்கள் தயக்கமின்றி தங்களுக்கு வேண்டியதை கேட்கலாம் ". என்று பதிலளிக்கிறார் .
No comments:
Post a Comment