திடுக்கிட்ட நீலகண்டர் ஆண்டவன் தனக்கு அப்பாக்கியம் தரவில்லை தனக்கு பிள்ளை செல்வம் இல்லை என்கிறார் . உடனே முதியவர் மனைவியை அழைத்து அவள் கை பிடித்தபடி கோவில் குளத்தில் இறங்கி சத்தியம் செய் என்கிறார் . உடனே நீலகண்டர் கைத்தடியின் ஒரு முனையை தான் பிடித்துக்கொண்டு மறுமுனையை தன் மனைவியை பிடிக்க செய்து குளத்தில் இறங்குகிறார் .. கோபமடைந்த பெரியவர் இதை நான் ஒப்புக்கொள்ள முடியாது நான் செல்கிறேன் என்று பயமுறுத்துகிறார் . இப்படி நீ செய்வதன் காரணத்தை ஊர் பெரியோர்கள் முன் விளக்கு இல்லையெனில் இந்த பழி உன்னை விட்டு நீங்காது. நான் செல்கிறேன் என்று முடிவாக கூறுகிறார் . வேறு வழியின்றி நடந்த உண்மைகளை அவர் எல்லோர் முன் விளக்குகிறார் . அப்போது அவ்வதிசயம் நிகழ்கிறது . நீலகண்டர் தம்பதியினர் அக்குளத்திலிருந்து இளம் தம்பதியினராக எழுகின்றனர் .ஈசன் அவர்களுக்கு காட்சி கொடுத்து சிவபதத்தையும் கொடுக்கிறார் . இவ்வாறு நீலகண்டர் திருநீலகண்ட நாயனார் ஆகிறார் .
No comments:
Post a Comment