பித்தா பிறைசூடீ என பாட தொடங்கிய சுந்தரர் மடை திறந்த வெள்ளம்போல ஐயனை துதித்து உள்ளம் உருக்கச்செய்யும் பதிகங்கள் பாடிய வண்ணம் ஈசன் குடியிருக்கும் திவ்ய தலங்களை சேவித்த வண்ணம் செல்கிறார் . ஈசன் தான் வாக்களித்தபடி தனக்கும் சுந்தரருக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்திய மெயசிலிர்க்க வைத்த சம்பவங்களும் உண்டு இரவு . பல ஆலயங்களில் ஐயனை தரிசித்து கொண்டு திருவதிகை வீரட்டானம் அடைகிறார் சுந்தரர் . அப்பர் வாழ்ந்த இடமாதலால் அங்கு கால் வைக்க மனம் ஒப்பாதவராய் வெளியே ஒரு சத்திரத்தில் தங்கி இரவு படுக்கிறார் . விரட்டாநீஸ்வரர் இத்தனை தூரம் வந்து விட்டு தன்னை காணாமல் தன் பக்தன் செல்வது மனம் ஒப்பாமல் ஒரு முதியவராக மாறி அங்கு செல்கிறார் .
No comments:
Post a Comment