இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வந்த அவர்கள் வாழ்வில் விதி விளையாடியது. ஒரு நாள் நீலகண்டர் பாதையில் ஒரு பரத்தையை காண நேர்கிறது . அவள் அழகில் மயங்கி சிறிது மனம் தடுமாறிய அவர் அவளுடன் உறவாட நேர்கிறது . தன் நிலைக்கு திரும்பிய அவர் தன் தவறை உணர்ந்து வெட்கித்து மனமுடைந்து போகிறார் . வீடு திரும்பிய அவர் அமைதியாக வரவேற்ற மனைவியை கண்டு சிறிது மனம் தேறினார் . ஆனால் அவள் உண்மை உணர்ந்திருந்தாள் ஆகையால் நீலகண்டர் அவளை நெருங்கி அவளை தொட யத்தனித்தபோது சட்டென விலகி ''எம்மை தீண்டாதீர் நாம் வணங்கும் நீலகண்டர் மீது ஆணை '' என்று உரைத்தாள் . திடுக்கிட்ட அவர் தடுமாறி பின் தம் தவறுக்கு இது தக்க தண்டனையே என்று மனசமாதானமடைந்து தம்மை என்று அவள் பன்மையில் சொன்னதால் அது பெண் இனத்தையே சேர்த்து குறிக்கும் என எண்ணி அன்று முதல் பெண் இனத்தையே தவிர்த்து மன உறுதியுடன் தம்பதியினர் வாழ தொடங்கினர் .
No comments:
Post a Comment