Sunday, 15 January 2017

ஈசன்  சுந்தரருக்கு  தன்னையே  தோழனாக  தந்து  மகிழ்ந்தார் . அது  முதல் அவர்  தம்பிரான்  தோழர்  என  அழைக்கப்பட்டார் . கைலையில்  இவர் சந்தித்த   இரு  பெண்களில்  கமலினி  என்பவர்  திருவாரூரில்  ருத்திரகணிகை  குலத்தில்  பிறந்து  பரவையார்  என்ற  பெயருடன்  வளர்ந்து  வந்தார் . ஆரூரர்  அவ்விருவரையும்  தானே சந்திக்க  வைத்து  ஊர்மக்கள்  கனவில்  தோன்றி  அறிவித்து  அவர்கள்  திருமணத்தையும்  இனிதே  நிறைவேற்றி  வைக்கிறார் .இப்பேற்பட்டது  ஈசனுடைய  தோழமை  ஒரு  திருமணத்தை  நிறுத்தியதற்கு  பரிகாரமாய்  இத்திருமணத்தை  தானே     நடத்தி  வைக்கிறார் .அவருக்கு  சுந்தரர்  மீது  அத்தகைய  உரிமை  கலந்த  தோழமை .  அங்கு  சிறிது  காலம்  அமைதியாக  பல  சிவ  தலங்களை  தரிசித்த  வண்ணம்  வாழ்கிறார் .ஒரு  நாள்  கோயிலில்  சிவனடியார்கள்  கூட்டத்தை  காணும்போது  பரவசமடைந்து  இவர்களுக்கு  அடியானாக  ஆவது  எப்படி  என  யோசித்தவாறு   ஆரூரனை  வணங்க  செல்கிறார் . அவருக்கு  ஈசன்  சுந்தரா  என்னை  பாடுவது  போல்  என்  அடியார்களையும்  பாடு  என்று  கூறி ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  பாட  சொல்கிறார் .  இன்ப  அதிர்ச்சியடைந்த  சுந்தரர்  உள்ளம்  நெகிழ  மடை  திறந்தாற்போல்   வார்த்தைகள்  வர  பாட  தொடங்குகிறார் .

No comments:

Post a Comment