சுந்தரர் வரவை முன்பே அறிந்து கொண்ட தில்லை வாழ் அந்தணர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்கிறார்கள் .தில்லை கோவிலையும் அந்த ஈசனையும் கண்குளிர கண்ட சுந்தரர் மிக ஆனந்த பரவசத்துடன் மேனி சிலிர்க்க தன்னை மறந்த நிலையில் இருந்தார் . தில்லை கூத்தன் அவரை ஆரூர் செல்லும்படி ஆணை இடுகிறார் . அவ்வாறே சுந்தரர் திருவாரூர் செல்றார் . ஆரூரர் எல்லோர் கனவிலும் வந்து சுந்தரரை மாப்பிள்ளை போல் அலங்கரித்து கோலாகலமாக வரவேற்க செய்கிறார் . மேனி சிலிர்க்க ஆரூரரின் அன்பை கண்டு வியக்கிறார் . ஈசன் அவரை அவர் திருமணத்தன்று தடுத்து நிறுத்தியதால் இனி எப்போதும் மாப்பிள்ளை கோலத்துடன் இருக்க ஆணை இடுகிறார் . சுந்தரருக்கும் திருஆரூரரு க்கும் உள்ள பிணைப்பு அலாதியானது . அதிசயிக்க தக்கது .
No comments:
Post a Comment