அன்பே வடிவான ஈசன் தன் அடியனான மணிவாசகர் இவ்வாறு அவதி யுறுவதை கண்டு பொறுப்பாரா ? வறண்டு கிடந்த வைகையில் வெள்ளம் பெருக வைக்கிறார் கரையிலுள்ளொர் பெரும் அவதிக்கு ஆளானார்கள் . மன்னனிடம் செய்தி தெரிவிக்கப்பட்டது . திடீரென இவ்விதம் நேர என்ன காரணம் என வியந்தார் . உடனே வீட்டுக்கொரு ஆள் அனுப்பி எல்லோரையும் கரையை அடைக்கும் பணியில் ஈடுபடுத்துமாறு ஆணை இட்டான் . அந்த ஊரில் வந்தி எனும் பிட்டு விற்கும் கிழவி இருந்தாள் சிறந்த சிவபக்தை . அவள் யாருமற்ற அநாதை .அனுப்ப அவள் வீட்டில் யாரும் இல்லை . ஈசன் லீலை தான் என்னவென்பது ? ஈசனே ஒரு கூலி ஆளை போல் அவளிடம் வந்து மன்னனின் ஆணையை நிறைவேற்ற அவளுடைய சார்பாக தான் செல்வதாக கூறுகிறார்
No comments:
Post a Comment