ஈசன் வந்தி கிழவியிடம் கூலியாக என்ன தருவாய் ? என வினவுகிறார் . அதற்கு அவள் தன்னிடம் வேறு என்ன உள்ளது அவள் செய்யும் பிட்டில் உதிர்வதை உனக்கு கொடுக்கிறேன் என்று கூறினாள் . அன்று அவள் செய்த மொத்த பிட்டும் உதிர்ந்து விட்டது . அவளும் மகிழ்ச்சியுடன் அத்தனையும் கொடுத்தாள் . மீதம் இருந்தால் அவள் அதை விற்று அதனால் அவளுக்கு மீண்டும் வினை சேரும் . அதன் பயனை கழிக்க இப்புவியில் இன்னும் சிறிது காலம் வாழ வேண்டியதாகிவிடும் என்பதால் அன்பே உருவான ஈசன் அவ்வாறு செய்கிறான் .அவன் கருனைதான் என்னவென்பது ? அவளை தன்னிடம் சேர்த்தும் கொள்கிறான் . அவருடைய விளையாடல் தொடர்கிறது . அவர் கரையை அடைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் இடத்தை அடைகிறார் .
No comments:
Post a Comment