அரிமர்த்தன பாண்டியன் வாத வூரரை மதுரைக்கு வரவழைத்து தன் விருப்பத்தை முக்கியஸ்தர்களுக்கு சொல்லி வாதவூரரை சபைக்கு அறிமுகப்படுத்துனார் . அவர்களும் வாதவூரரின் அறிவுத்திறன் கண்டு மகிழ்ந்தனர் . அரசனும் அவரை தன் பிரதான மந்திரி ஆக்கிக்கொள்கிறார் . வாதவூரரின் மனதில் அந்த "தேடல் '' இருந்துகொண்டே இருந்தாலும் தன் கடமைகளை சரிவர செய்து கொண்டிருந்தார் . அப்போது பாண்டியர் படை பலத்தை கண்காணித்த படை தலைவன் குதிரை படையை பலப்படுத்த வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார் .அரசனும் குதிரைகள் வாங்கும் பொறுப்பை வாதவூரரிடம் ஒப்படைக்கிறார் . அவரும் வேண்டிய திரவ்யங்களுடன் குதிரை வாங்க புறப்படுகிறார் .
No comments:
Post a Comment