சுந்தரர் பரவைனாச்சியாருடன் சில காலம் திருவாரூரில் தங்கி இருந்தார் . அப்போது சேரமான் பெருமான் நினைவு வர சேரநாடு செல்கிறார் திருஅஞ்சய்களம் வந்து ஈசனை த்யானிக்கிறார் .அப்போது அவர் மனம் பெரும் சஞ்சலத்தில் ஆழ்கிறது . கைலைவாச ஞாபகம் அவரை வாட்டுகிறது . எத்தனை நாள் இவ்வாறு ஐயனை பிரிந்திருப்பது என்ற வேதனை அவரை துன்புறுத்துகிறது . ஈசனிடம் மிக வருந்தி போற்றுகிறார் . அப்போது அவருக்கு இன்ப அதிர்ச்சி .வெளியில் தேவர்கள் யானை அம்பாரியுடன் சுந்தரரை அழைத்து செல்ல காத்திருக்கின்றனர் . மெய்சிலிர்த்து சுந்தரர் இப்பாடல் பாடுகிறார் .
தானெனை முன் படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே
நானென்ன பாடலெந்தொ நாயினேனை பொருட்படுத்து |
வானெனை வந்தெதிர்கொள்ள மத்த யானை அருள் புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே |
இவ்வாறு சுந்தரர் பூமியில் தன் கடமையை செவ்வனே முடித்து மீண்டும் கைலாயம் செல்கிறார் . அவர் நமக்கு அளித்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் அவருடைய திருதொண்டர்தொகை . அதனால் கிடைத்த நாயன்மார்கள் வரலாறு .

No comments:
Post a Comment