சுந்தரர் தன் யாத்திரையில் ஒரு முறை அவினாசி அடைந்தார் . அங்கு ஒரு வீட்டில் ஒரு பையனுக்கு உபநயனம் நடந்து கொண்டிருந்தது . ஊரே மகிழ்ச்சியில் திளைத்திருக்க ஒரு வீட்டில் மட்டும் அழுகை ஒலி கேட்பதை கண்டு சுந்தரர் அதன் காரணத்தை வினவுகிறார் .சில காலம் முன் இவர்கள் மகனும் அவனுடைய வயது ஒத்த அந்த உபநயன சிறுவனும் ஒன்றாக நீராட போன சமயம் இவர்கள் மகனை முதலை இழுத்து சென்று விட்டதாக கூறுகின்றானர் . பெற்றொர்கள் தங்கள் பிள்ளையை நினைந்து அவன் உயிரோடு இருந்திருந்தால் அவனுக்கும் இவ்வாறு இந்த விசேஷம் நடந்திருக்கும் என்று அது நிறைவேறாதது வேதனை அவர்களை மிக வாட்டுவதை தெரிவிக்கின்றனர் .
No comments:
Post a Comment