திருவாசகத்துக் கு உருகாதார் எவ்வாசகத்துக்கும் உருகார் இது எல்லோ ரும் அறிந்த வழக்கு .திருவாசகத்தேன் என்று சான்றோரால் உயர்வாக சொல்லப்படுகிறது . தேன் ஒரு அற்புத பொருள் . தேன் எத்தனை காலம் வைத்தாலும் கெடாது . தேனில் எதை போட்டு வைத்தாலும் அந்த பொருளும் கெடாது . அத்தனை உயர்ந்தது திருவாசகமும் . மாணிக்கவாசகர் ஈசனிடம் எதை வேண்டியோ எதையாவது பெறவோ பாடியது அல்ல திருவாசகம் . நெஞ்சம் உருகி கண்ணீர் ஆறாய் பெருக உணர்ச்சி வயப்பட்டு இதயத்திலிருந்து பொங்கி வழிந்த வார்த்தைகள் . கேட்போர் நெஞ்சையும் கலங்க வைக்கும் பாக்கள் . ஈசனே மாணிக்கவாசகர் சொல்லகேட்டு ஓலையில் எழுதி கையொப்பமிட்டு தில்லை கோயில் நடராஜர் சன்னதி முன் வைத்தார் என்றால் இதன் பெருமைதான் என்னவென்று சொல்ல . ஈசன் கருணையை தான் எப்படி போற்ற ? இதனால் தான் திருவாசகம் நமக்கு சேதமில்லாமல் முழுமையாக கிடைத்திருக்கிறது .
No comments:
Post a Comment