வைகை நதிக்கு ஒரு தனி பெருமை உண்டு . எல்லா நதிகளையும் போல் அது கடலிலோ சமுத்திரத்திலோ கலந்து உப்பு நீராவதில்லை . குட்டை குளங்களை நிரப்பிக்கொண்டு அந்த எல்லையிலேயே இருப்பது . அப்பேற்பட்ட வைகை கரையில் உள்ள ஒரு இடம் திருவாதவூர் . அங்கு ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தவர் வாதவூரர் அவர் தந்தை யாக யக்ஞங்களை முறையோடு செய்பவர் . சிறந்த பிராம்மணர் . வாதவூரர் சிறு வயது முதலே ஈசனிடம் சிறந்த பக்தி உடையவர் . ஆனால் மற்ற சடங்குகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார் . ஆனாலும் எல்லாவற்றையும் படித்து அறிந்து கொள்ளும் ஆர்வமுடன் பல நூல்களை படித்து ஆராய்ந்து கொண்டிருந்தார் .
No comments:
Post a Comment