சுந்தரரை பேசும்போது இன்னும் இரண்டு நாயன்மார்களை சொல்ல வேண்டியது அவசியம் . ஒன்று விரன்மிண்ட நாயனார் . சேர நாட்டில் இன்று திருச்செங்கோடு என்று அழைக்கப்படும் இடத்தில் பிறந்தவர் விரன்மிண்டர் . அவர் சிறந்த சிவபக்தர் . சிவன் அடியார்களை மிகவும் பக்தியுடன் போற்றுபவர் . அவர் பல சிவ தல ங்களை சேவித்து விட்டு திருவாரூர் வந்து சேர்ந்தார் . அங்கு சிவடியார்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கூடத்தில் சிவ த்யானத்தில் இருந்தனர் . அப்போது சுந்தரர் இவர்கள் யாரையும் கவனியாமல் நேராக ஈசன் சன்னதிக்கு சென்றார் . சிவனடியார்களை வணங்காமல் சென்ற சுந்தரரை கண்டு மிக கோபம் கொண்ட விரன்மிண்டர் சுந்தரரையும் அவரை ஏற்று கொண்ட ஈசனையும் கடுமையாக ஏசுகிறார் . அதிர்ச்சி அடைந்த சுந்தரர் ஈசனிடம் மிக வருத்தத்துடன் முறையிடுகிறார் . ஈசன் சுந்தரரை சமாதானம் செய்து ''தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் '' என்று அடியெடுத்து கொடுத்து சிவனடியார்கள் பெருமையை பாடும்படி ஆணை இடுகிறார் . சுந்தரரும் அவ்வாறே ஆரம்பித்து சிவத்தொண்டர்கள் பெருமையை பாடுகிறார் . அதுவே ''திருத்தொண்டர் தொகை '' என்று பெருமை பெறுகிறது . அவர் பாடும்போது உள்ளே நுழைந்த விறன்மிண்டர் ''விரிபொழில் சூழ் குன்றையார் விரன்மிண்டற்கு அடியேன் '' என்ற வரிகளை கேட்டு மெய் சிலிர்த்து சுந்தரர் காலடியில் வீழ்கிறார் . மன்னிப்பும் கேட்கிறார் . அவரும் சுந்தரர் தோழறாகிறார் . இவ்வாறு விறன்மிண்டர் இந்த பொக்கிஷம் நமக்கு கிடைக்க ஒரு மறைமுக காரணமாகிறார் .
No comments:
Post a Comment