ஈசன் அப்பரின் உறுதியை கண்டு மகிழ்ந்து அவருக்கு தோற்றமளித்து 'அன்பரே பக்கத்திலுள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் குளத்தில் எழுந்திருங்கள் . அங்கு கைலை காட்சியை காண்பீ ர்கள்.' என்று கூறி மறைந்தார் . மெய்சிர்த்து அப்பர்பெருமான் அக்குளத்தில் மூழ்கி எழும் போது காவிரி கரையில் திருவையாற்றில் ஐயாறப்பன் கோயில் குளத்தில் எழுவதை கண்டு உள்ளம் சிலிர்த்து போனார் . அதைவிட அவர் உடலில் ஒருவித காயமும் இன்றி தேய்ந்த உறுப்புகளெல்லாம் வளர்ந்து பழைய நிலையை அடைந்த்திருப்பது கண்டு ஐயன் கருணையை நினைந்து நெக்குருகி போனார் . 'யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது '' . ஆலயத்தை அடைந்து ஐயனை சேவிக்கும்போது அவர் கண்ட காட்சி அவரை மெயசிலிர்க்க வைத்தது . பனி மூடிய கைலாய சிகரம் உச்சியில் ஒரு மணிமண்டபம் . அதில் உயர்ந்த ஆசனத்தில் ஈசன் உமை அன்னையுடன் வீற்றிருக்கிறார். தேவர்கள் சித்தர்கள் கின்னரர்கள் எல்லோரும் வந்து பணிந்து போற்றுகிறார்கள் . யோகிகள் முனிவர்கள் வந்து போகிறார்கள் . ஒரு கணம் இவ்வறிய கைலாய காட்சியை கண்டு மிக்க ஆனந்தம் எய்தி '' மாதர் பிறை கண்ணியானை '' என்ற பதிகம் பாடுகிறார் .
No comments:
Post a Comment