மஹாராணியாரும் அரசனின் இந்த போக்கால் மனமுடைந்து போயிருந்தார் . அந்த சமயத்தில் சம்பந்த பெருமான் சோழ நாட்டு திருப்பதிகள் தோறும் சென்று சிவபெருமான் மீது பதிகங்கள் பாடி நாடு தோறும் சைவம் தழைத்தோங்க பெரும் பாடு பட்டுக்கொண்டிருந்த செய்தி ராணியாரை எட்டியது . உடனே அவர் குலச்சிறையாரை அனுப்பி அவரை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்து எவ்வாராவது சமணர்களை வாதில் வென்று சைவத்தை பாண்டிய நாட்டில் மறுபடி ஸ்தாபிக்க செய்ய எண்ணி அவரிடம் அனுப்ப எண்ணம் கொண்டார் . அவ்வாறே குலச்சிறையாரும் சம்பந்தரை பணிந்து அவரை பாண்டிய நாட்டிற்கு அழைத்து வந்து சமண குருமார்களை எல்லா வாதங்களிலும் வென்று மறுபடியும் சைவம் தழைக்க செய்தார் . சமணர்களை கடுமையாக தண்டிக்க செய்து நாட்டை விட்டு விரட்ட செய்தார் . மன்னனும் தன் தவறை உணர்ந்து பிராயச்சித்தமாக பல சிவாலயங்களை கட்டினான் குலச்சிறையார் தொடர்ந்து சைவத்திற்கு பல தொண்டுகள் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்து பிறகு சிவனடி சேர்ந்தார் .
No comments:
Post a Comment