திருவையாறில் நாவுக்கரசர் சில நாட்கள் தங்கி உழவார பணி செய்தார் . பிறகு சில தலங்களை தரிசித்தபின் திருப்பூந்துருத்தி வந்து சேர்ந்தார் . அப்போது ஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சமணர்களை எல்லா வாதிலும் வென்று அங்கு சைவத்தை நிலைநாட்டி பாண்டியனின் நோய் தீர்த்து அவர் கூனையும் நிமிர்த்தி மனநிறைவோடு வரும் செய்தி கேட்ட அப்பர் பெருமான் இறைவனின் திருவருளை பூர்ணமாக பெற்ற அத்திருமகனை தோளில் சுமக்க பேராவல் கொண்டார் . அடியார் கூட்டம் பின்தொடர பல்லக்கில் அவரை கண்டதும் தனியாக அந்த கூட்டத்தில் மறைந்து சென்று சிவிகையை நெருங்கி தாமும் அச்சிவிகையை தாங்கி தொடர்ந்தார் . திருப்பூந்துருத்தி அடைந்ததும் நாவுக்கரசரும் அங்கிருப்பதை கேள்விப்பட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்த சம்பந்தர் அப்பர்பெருமான் எங்கே என்று ஆவலுடன் வினவ அப்பர் ' இதோ தங்கள் சிவிகையை தாங்கும் பாக்கியம் பெற்று இங்கே இருக்கிறேன் ' என்று பதில் உரைத்தார் . சம்பந்தர் பதைபதைத்து ஐயா தாங்கள் என்னை சுமைப்பதா ? என்னை இப்பாபத்திற்கு ஆளாக்கி விட்டிர்களே ' என்று சொல்லி சிவிகையிலிருந்து குதித்தார் . அவரை அப்பர் வணங்க சம்பந்தர் அப்பரை வணங்க அடியார்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் .
No comments:
Post a Comment