(பெருமிழலை குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் )
மிழலை நாட்டிலே பெருமிழலை என்றொரு ஊர் . அங்கு குறும்பர் எனும் பெரும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார் . அவர் சிவனடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் . அவர்களுக்கு எவ்வித சேவைகளையும் தயங்காது செய்து வந்தார் . அவருக்கு சுந்தரர் மீது அளவு கடந்த பக்தி . அவரை போற்றி புகழ்வதில் பேரானந்தம் அடைந்தார் . அவருக்கு அட்டமா சித்திகளும் சித்தியாயின . இவ்வாறு இருக்கையில் திருவஞ்சைக்களத்தில் சுந்தரர் மறுநாள் கைலாசம் செல்ல இருப்பதை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்தார் . சுந்தரர் இல்லாத இவ்வுலகில் வாழ்வதை அவர் விரும்பவில்லை . கண் இழந்தவன் போல் வாழும் வாழ்வை விரும்பாமல் அவருக்குமுன் தான் கைலாயம் சென்று விட எண்ணினார் . தன் அபாரமான யோக சக்தியால் தன் உடல்கூட்டை விட்டு ஆன்மாவை கைலாய நாத.னின் காலடியில் சமர்ப்பித்தார்.அவரோடு ஐக்கிய மானார் .

No comments:
Post a Comment