திருப்பூந்துருத்தியில் அப்பரும் சம்பந்தரும் சேர்ந்து இறைவனை தொழுது மகிழ்ந்தனர் . பிறகு அப்பர் சம்பந்தரிடம் அவருடைய பாண்டியநாட்டு பயணத்தை குறித்து அறிந்து கொள்ள ஆவலை தெரிவித்தார் . சம்பந்தரும் பாண்டிய பட்டத்தரசி மங்கையர்க்கரசி அமைச்சர் குலச்சிறையார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மதுரை சென்றதையும் அங்கு அனல் வாதம் புனல் வாதம் என்று எல்லா வாதங்களிலும் சமணர்களை வென்றது , கூன்பாண்டியனின் நோயை குணமாக்கி அவருடைய கூனை நிமிர்த்தி அவரை 'நின்றசீர்நெடுமாறன் ' ஆக மாற்றியதை விரிவாக கூற . அப்பர் புளகாங்கிதம் அடைந்தார் . அரசன் மனம் மாறி சமணர்களை கடுமையாக தண்டித்ததையும் தானும் முழுமையாக சைவத்திற்கு மாறி எம்பிரானுக்கு பல ஆலயங்கள் எழுப்ப பேராவல் கொண்டது பற்றியும் தெரிவித்தார் . அப்பர் இச்செய்திகளை கேட்டு பேரானந்தம் அடைந்தார் . சம்பந்தர் அங்கிருந்து சென்றதும் அப்பரும் சில நாட்கள் அங்கு தங்கி உழவார பணி செய்துவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தார் . திருநெல்வேலி , திருப்புகலூர் போன்ற இடங்களுக்கு சென்றார் .
No comments:
Post a Comment