சுந்தரா என்னை நீ உணரவில்லையா ? என்ற குரலை கேட்ட சுந்தரர் பிரமித்து போய் தன் தவறை உணர்கிறார் . வந்தது ஈசன் என்பதை உண ர்கிறார் .தனக்கு வார்த்தை கொடுத்ததை ஈசன் மறவாமல் தான் செய்ய இருந்த பெரும் பாவத்திலிருந்து தன்னை காத்த ஈசனின் அன்பை வியந்து நெகிழ்ந்து பலவாறு பிதற்றுகிறார் . ஈசன் 'என்னை பாட அல்லவோ நீ பிறந்தாய் ? பாடு ' என கட்டளை இடுகிறார் . என்ன பாடுவேன் என தன அறியாமையை நினைந்து நெக்குறுகி வினவுகிறார் . ஈசன் தன்னை பித்தா என்றெல்லாம் ஈசினாயே அதையே பாடு என்று சொல்ல ''பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா '' என்ற பதிகம் பாடுகிறார் .
No comments:
Post a Comment