சுந்தரருக்கு வாக்களித்தபடி ஈசன் அவருக்கு தன்னை காட்டிகொண்ட நிகழ்ச்சிகள் பல .முதல் முறையாக சுந்தரர் தன்னை மறந்து ஒரு பெண்ணை மணக்க முனைந்த போது முதியவராக வந்து திருமணத்தை நிறுத்தி அவரை ஆட்கொண்டது கண்டோம் . பிறகு திருவதிகை என்னும் ஊரின் வெளியே ஒரு சத்திரத்தில் உறங்குகையில் சுந்தரர் தன தலை மீது யாரோ பாதம் வைப்பதை உணர்ந்து வேறு பக்கம் தலை வைத்து படுக்கிறார் . அப்போதும் அதே போல் தன் தலைமேல் பாதம் வைப்பதை கண்டு வியப்படைகிறார் . அப்போது ஈசன் சுந்தரா , என்னை தெரியவில்லையா ? என்று கேட்டு மறைகிறார் .சுந்தரர் ஈசன் கருணையை நினைத்து நெ க்குருகுகிறார் .
No comments:
Post a Comment