கைலையில் சுந்தரரை கவர்ந்த மங்கையரில் ஒருவர் திருவாரூரில் பிறந்து வாழ்கிறார் .பரவையார் என்பது அவர் பெயர் . அழகிலும் மற்ற கலைகளிலும் தேர்ந்தவர் . சிறந்த சிவபக்தி உடையவர் . தினமும் த்யாகேசர் முன் பாடி ஆடும் பழக்கமுடையவர் . தியாகேசர் அருளால் அவர்கள் சந்திக்க நேர்கிறது . ஈசன் திருவருளால் அவர்கள் திருமணம் இனிதே நடைபெருகிறது . சுந்தரர் அழகும் பக்தியும் அவர் பாடிய பாக்களும் அவருக்கு பெரும் மதிப்பை எற்படுத்தி இருந்தது . சில பெரியவர்கள் தங்கள் பெண்களை மணக்குமாறு சுந்தரரை வேண்டினர் . ஆனால் சுந்தரர் மறுமுறை அத்தவறை செய்வாரா ? அப்பெண்களை தன் மடியில் இருத்தி காதில் மந்திரம் ஓதி தன் மகளாக ஏற்று கொள்கிறார் . இவர்கள் பற்றி தன் பாடலிலும் குறிப்பிட்டிருக்கிறார் .
No comments:
Post a Comment