ஈசன் நீலநக்கர் கனவில் இவ்வாறு இவர் மனைவி பெருமையை எடுத்து கூறி மறைந்தார் . திடுக்கிட்டு எழுந்த நீலநக்கர் தம் மனைவி பெருமையை உணர்ந்தார் . ஆறு காலமும் விடாமல் தாம் செய்யும் பூஜையைவிட தாய் பாசத்தோடு தம் மனைவி செய்த அச்சேவை உயர்வாக மதித்த ஈசனின் அன்பு உள்ளத்தை கண்டு நெகிழ்ந்து போனார் . உடனே மனைவியை காண துடித்தார் . பொழுது விடிந்ததும் மனைவியை காண கோவிலுக்கு சென்று கனவில் ஐயன் தோன்றி கூறியதை மனைவியிடம் சொல்லி மகிழ்ந்து அவளை வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றார் .
No comments:
Post a Comment