இவ்வாறு அன்னியோன்னியமாக தம்பதிகள் வாழ்ந்து வந்தனர் . ஒரு நாள் மாலை இருவரும் அய்யவந்திநாதரை சேவிக்க ஆலயம் சென்றனர் . நிலநக்கர் எம்பெருமானை மலர்களால் அர்ச்சித்து பிறகு எதிரில் அமர்ந்து பஞ்சாக்ஷரம் ஜபிக்கலானார் . மனைவி பக்கத்தில் நின்று கொண்டு எம்பெருமானை சேவிக்கலானார் . அப்போது கர்பகிருகத்தின் மேல் சுவரிலிருந்து சிலந்தி ஒன்று லிங்கத்திருமேனி மீது விழுந்து அங்கும் இங்கும் ஓடலாயிற்று . அதை கவனித்த அம்மையார் ஒரு தாய்க்கு உரிய கவலையுடன் பக்கத்தில் சென்று வாயால் ஊதி சிலந்தியை விரட்டினார் . அதை கவனித்த நிலநக்கர் மிக்க கோபம் கொண்டவராய் ஐயன் மேனியில் எச்சில் படும்படியாக ஊதியதை சகிக்கமாட்டாமல் என்ன காரியம் செய்தாய் இவ்வாறு ஐயன் திருமேனியை அசுத்தம் செய்ததை பொறுக்க முடியாது . இனி என் முன் நிற்காதே போய்விடு. இனி உனக்கு என் வீட்டில் இடமில்லை . என்று கோபத்துடன் கூறிவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார் .
No comments:
Post a Comment