Thursday, 6 September 2018

கணவனின்   கோபத்தை   கண்டு   மிரண்டு   அம்மையார்   வீடு   செல்லவில்லை .  அவர்   சொல்லை   மீறி   வீடு   செல்ல   அந்த   கற்புக்கரசியின்   மனம்   இடம்   தரவில்லை .  இறைவனிடம்   முறை   இடுவது   தவிர   வேறு   வழி   தெரியவில்லை .  "இறைவா   இது   என்ன   சோதனை?  நான்   ஒரு   தவறும்   செய்யவில்லையே .    என்   குழந்தையாக   பாவிக்கும்   உன்   மீது   அந்த   சிலந்தி   விழுந்ததை   என்னால்   தாங்க   முடியாமல்   அன்றோ   அவ்வாறு   செய்தேன்.  எனக்கு   ஏன்   இப்பெரும்   தண்ட  னை ?"  என்று   புலம்பி   கொண்டு   ஆலயத்திலேயே   தங்கிவிட்டாள் .   வீடு   சென்ற   நிலநக்கருக்கு   மனம்   அலை   பாய்ந்தது .  ஊண்   உறக்கமின்றி   தவித்தார் .  தன்   மனைவி   இவ்வாறு   ஐயனை   எச்சிலால்   அசுத்தம்   செய்து   விட்டாளே   என்ற   எண்ணம்   அவரை   அலைக்கழித்தது .  பட்டினி   கிடந்தார் .   அவர்   தூக்கத்தில்   அய்யாவந்திநாதர்   அப்பனே   என்று   கூப்பிட்டார் .  மானும்   மழுவும்    தாங்கி   நின்ற   ஐயனை   கண்ட   நீலநக்கர்   திடுக்கிட்டார் .  அவர்   உடலெங்கும்   கொப்புளங்கள் .   ஈசன்   அப்பனே   பார் .  உடலெங்கும்   கொப்புளங்கள் .   உன்   மனைவி  அன்பு  மிகுதியால்   ஊதி   சிலந்தியை   விரட்டியதால்  என்   நெற்றி   மட்டும்   சிலந்திக்கு   தப்பியது  என்றார் .

No comments:

Post a Comment