அன்று முதல் நமிநந்தி அடிகள் தினமும் ஆலயம் முழுவதும் நீரில் விளக்கேற்றி மகிழ்ந்தார் . அவர் பெருமையை மக்கள் வெகுவாக புகழ்ந்து அவரை வணங்கினர் இவ்வாறு இருக்கையில் தண்டியடிகள் என்பவரின் பெரும் முயற்சியால் ஆரூரிலிருந்து சமணர்கள் விரட்டப்பட்டனர் . சைவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் ஆரூர் ஈசனை வழிப்பட்டனர் . அடிகளும் தம் தெய்வத்தொண்டுகளை குறைவின்றி செய்து வந்தார் . இவரை பற்றி கேள்விப்பட்ட சோழ மன்னனும் அடிகளை தியாகராஜர் திருக்கோயில் திருப்பணிகள் எல்லாம் செய்ய தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை ஏற்க்க செய்தார் . அவரும் அப்பொறுப்புகளை பக்தியுடன் ஏற்று குறைவின்றி நடத்தி வந்தார் .
No comments:
Post a Comment