தம்பதிகள் தொடர்ந்து தங்கள் தெய்வீக பணிகளை செய்து கொண்டு மகிழ்ச்சியாக இல்ல.றம் நடத்தி கொண்டிருந்தனர் . அப்போது ஞானசம்பந்தர் தொண்டர்களுடன் அங்கு எழுந்தருளினார் . தம்பதிகள் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களை உபசரித்து அமுது செய்வித்து மகிழ்ந்தனர் . நீலநக்கர் அவர்களை இரவு தங்கிவிட்டு மறுநாள் செல்லும்படி கேட்டுக்கொண்டார் . சம்பந்தபெருமான் நிலநக்கர் பெருமையை நிறைய கேள்விப்பட்டிருந்தார் . ஆதலால் அவர் பெருமையை மேலும் எடுத்துக்காட்ட எண்ணம் கொண்டார் . ஆகையால் அவர் என்னைப்பற்றி கவலை வேண்டாம் . என்னுடன் அடியார் ஒருவர் வந்துள்ளார். நீலகண்ட பெரும்பாணரும் அவர் மனைவி விறலியாரும் என்னுடன் வந்துள்ளனர் . அவர்களுக்கு இரவு தங்க இடம் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் . நீலநக்கர் மகிழ்ச்சியோடு அவ்விருவரையும் சுடர்விட்டெரியும் குண்டத்து அருகிலேயே அவர்கள் படுக்க இடமளித்தார் கு ண்டத்தில் எரிந்த தீ அவர்கள் நெருங்கியதும் ஒதுங்கி வலம்வந்து எரிந்தது . கூடி எல்லோரும் நீலகண்டர் தாழ்ந்த வகுப்பில் பிறந்தவரானாலும் தான் வணங்கும் இறைவனுக்கு சமமாக பாவித்த நிலநக்கரை வெகுவாக கொண்டாடினார்கள் .
No comments:
Post a Comment