அப்பர்பெருமான் மனம் நிறைவோடு திருவாய்மூர் ஐயனை தரிசித்து ஆனந்தம் அடைந்தார் . பிறகு சம்பந்தரோடு மடத்தில் தங்கிவிட்டு காலை திருமறைகாடை அடைந்தனர் . அங்கிருக்கும்போது மதுரையிலிருந்து அரசி மங்கையற்கரசியரும் அமைச்சர் குலச்சிறையாரும் அனுப்பியதாக தூதர்கள் சம்பந்தரை தேடி வந்தனர் . பாண்டிய மன்னன் சமணர்களுக்கு அடிமையாக இருப்பதால் சைவர்கள் பெரும் துன்பம் அடைவதால் சம்பந்தர் வந்து சைவம் மறுபடி தழைக்க செய்ய வேண்டும் என்று அரசி மிக பணிவோடு வேண்டி கொள்வதாக கேட்டுக்கொண்டனர் . அப்பர் சம ணர்களிடம் தான் அனுபவித்த கொடும் துன்பங்களை கூறி அங்கு செல்ல வேண்டாம் என்று சம்பந்தரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டார் . ஆனால் சம்பந்தர் சைவர்களின் துயர் துடைப்பது தமது தலையாய கடமை என்று கூறி மிக பணிவோடு மறுத்துவிட்டார் . அப்பர் மனக்கவலையோடு திருமறைக்காட்டை விட்டு கிளம்பி தன் தலயாத்திரையை தொடர்ந்தார் .
No comments:
Post a Comment