சமணர்களிடமிருந்து வடதளி ஆலயத்தை மீட்டு அங்கு எம்பெருமானுக்கு வழிபாடுகள் குறைவர தொடங்கியதும் மன நிம்மதி அடைந்த அப்பர் பெருமான் தன் தலயாத்திரையை மீண்டும் தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள க்ஷேத்திரங்களை சேவிக்க யாத்திரையை தொடர்ந்தார் . ஒரு சிலந்தியும் யானையும் ஐயன் மீதுள்ள பக்தியால் போட்டியில் மடிய அவ்விரு ஜீவன்களுக்கும் உயர் பிறவி அளித்த ஜம்புகேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் திவானைக்காவலை அடைந்து அங்கு துதித்து மகிழ்ந்தார் . தொடர்ந்து திருச்சி , பராய்த்துறை போன்ற தலங்களை சேவித்து கொண்டு பதிகங்கள் பாடி துதித்து மன நிறைவு பெற்றார் . பிறகு காவிரியை கடந்து திருப்பைஞிலியை நோக்கி புறப்பட்டார் . அப்பாதையில் தான் அவர் யாருக்கும் அரிதான அப்பெரும்பேரை ஐயனிடமிருந்து பெற்றார் .
No comments:
Post a Comment