கைலை காட்சியை காணும் ஆவல் மனமெல்லாம் நிறைந்திருக்க அவர் கங்கை நதியை கடந்து நடக்கலானார் . காடு ,மேடு பள்ளம் கல் முள்ளு எதாலும் அவர் கவனத்தை சிதற அடிக்க முடியவில்லை . வாயில் பஞ்சாக்ஷரமும் மனதில் வேறு சிந்தனையும் இன்றி இரவு பகல் பசி தாகம் எதுவும் பாராமல் நடந்தார் . சில காலம் கிடைத்த கனிகளை உண்டார் . பிறகு அதையும் தவிர்த்தார் . நடந்து நடந்து அவர் பாதங்கள் தேய்ந்து உதிரம் கொட்டியது. அதற்குமேல் நடக்க இயலாமல் கைகளை ஊன்றி தவழ தொடங்கினார் . முழங்காலும் தேய்ந்து பழுதாக மார்பால் தேய்த்து நகர்ந்தார் உருண்டார் . உடல் முழுவதும் ரத்தவெள்ளமாக ஆயிற்று . ஆனாலும் அவருடைய உள்ளம் தளர்ந்தார் இல்லை .
No comments:
Post a Comment