கிடைக்கப்பெறாத இப்பேறை பெற்ற அப்பர்பெருமான் திருப்பைஞிலி பெருமானை மனமுருக தொழுது பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். அங்கு சில நாட்கள் உழவார பணி செய்து பிறகு தொண்டைநாட்டு திருத்தலங்களை சேவிக்க புறப்பட்டார் . அயனும் மாலும் அடிமுடி காண முடியாத பெரும் ஜோதியாக நின்ற எம்பெருமான் கோயில்கொண்டிருக்கு திருவண்ணாமலையை சேவித்து மகிழ்ந்தார் . பிறகு காஞ்சி அடைந் தார் . சமணர்களின் போதனையால் பல்லவ மன்னனால் பலவித சித்திரவதைக்கு ஆளாகி அத்தனையிலிருந்தும் ஈசனின் பெரும் கருணையால் மீண்டுவந்த அதிசயத்தை கேள்விப்பட்டிருந்த மக்கள் அவரை வரவேற்க பெரும் திரளாக கூடி இருந்தனர் . அதை கண்டு அப்பர் மெய்சிலிர்த்து போனார் . பதிகங்களும் தாண்டகங்களும் பாடி ஈசனை மகிழ்வித்து பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்த அப்பெருமகனை மக்கள் ஆரவாரத்துடன் எதிர்கொண்டு வரவேற்றனர் . அவரும் ஏகாம்பரேஸ்வரரை மனமுருக பாடி தொழுது ஆனந்தம் எய்தினார் .
No comments:
Post a Comment