அப்பர்பெருமான் காளத்திநாதரை சேவித்ததும் அவர் மனதில் எம்பெருமான் கைலாயநாதராக காட்சி அளிக்கும் கோலத்தை காண பெரும் ஆவல் எழுந்தது . மனதில் பொங்கி எழுந்த ஆவலை அடக்கமுடியாதவராய் உடனே புறப்பட்டார் . மனதில் ஐயனின் நினைவும் உதடுகளில் அவர் நாமமுமாக பல மலைகள் பல நதிகளை கடந்து வாரணாசி வந்து சேர்ந்தார் . அங்கு எம்பெருமானை மனம் குளிர சேவித்துக்கொண்டு தன்னுடன் வந்தவர்களை அங்கேயே விட்டு விட்டு அவர் கயிலையை நோக்கி புறப்பட்டார் . கைலை பயணமென்றால் சாதாரணமா ? அவர் பட்ட துன்பம் எத்தனை கல் நெஞ்சங்களையும் உருக வைக்கும் .
No comments:
Post a Comment