வடதளி ஆலயத்திற்கு அப்பர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு மக்கள் பெரும் நம்பிக்கையுடன் இனி தங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று பெரும் ஆவலுடன் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யலானார்கள் . அப்பரும் மக்களின் இந்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றார் . மக்கள் அங்குள்ள நிலைமையை கூறியதை கேட்டு மிக்க அதிர்ச்சி அடைந்த நாவுக்கரசர் அங்கு சமணர்களால் ஏற்பட்ட இக்கொடுமையை தீர்க்காமல் அங்கிருந்து நகருவதில்லை என உறுதி பூண்டார் . அவர் ஆலயம் சென்று 'ஐயனே சமணர்களால் இத்தகைய பெரும் துன்பத்திற்கு ஆளாகி உன்னை தரிசிக்க முடியாமல் தவிக்கும் அப்பாவி மக்களை நீ இவ்விதம் சோதிக்கலாமா ? அவர்கள் துயரை தீர்க்கும்வரை நான் உணவு அருந்த மாட்டேன் . இது சத்தியம் ' என்று கூறி அங்கு தங்கினார் . மக்கள் அவர் உணவு அருந்தாமல் பட்டினி கிடப்பதை காண சகியாமல் தவித்தனர் . இதற்கு மேல் ஐயன் சோதிப்பாரா? அன்றிரவு ஈசன் அரசனின் கனவில் தோன்றி ' அரசனே உன்கடமையை மறந்து சமணர்களால் மக்கள் படும் துன்பத்தை அறிந்தும் கடமையை செய்ய தாமதம் செய்யலாமா' என்று கூறி தன் திருமேனி புதைத்து வைக்கப்பட்ட இடத்தையும் அவருக்கு காட்டிக்கொடுத்து மறைந்தார் . அரசன் திடுக்கிட்டு எழுந்து தன் தவறை உணர்ந்து உடனே ஆலயத்திற்கு சென்று அப்பரை வணங்கி அவருடன் ஈசன் அடையாளம் காட்டிய இடத்திற்கு சென்று அத்திருமேனியை மீட்டு அப்பர் அடிகளால் மறுபடி பிரதிஷ்டை செய்வித்து மகிழ்ந்தார் மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர் . இதற்கு காரணமான சமணர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர் .
No comments:
Post a Comment