ஒருநாள் மூலன் பசுக்களை சுந்தரர் தியானத்தில் அமர்ந்திருந்த மலை அடிவாரத்தில் மேய விட்டிருந்தான் . அவன் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தரை கண்டு அவர் மீது மிக்க அனுதாபத்துடன் அவரை அணுகி இங்கு உணவு ஒன்றும் கிடைக்காது பசியுடன் இருப்பீர்கள் என்று தன்னுடைய சாப்பாடை எடுத்து கொள்ளுமாறு வற்புர்த்துகிறான் . அவர் தன்போன்ற சித்தர்களுக்கு பசி தாகம் எதுவும் கிடையாது என்று கூறியும் மூலன் நம்ப மறுக்கிறான் . அவரும் அவன் அன்பான கோரிக்கையை மறுக்க மனமில்லாமல் அதை பெற்றுக்கொள்கிறார் . இந்த அன்புக்கு பிரதியாக தான் ஏதாவது செய்ய விரும்புவதாக கூறுகிறார் . ஆனால் மூலன் தான் ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பதால் தனக்கு ஏதும் தேவை இல்லை என்று மறுக்கிறான் . அவரும் தேவை வரும்போது தருவதாக கூறி விடை பெறுகிறார் .
No comments:
Post a Comment