இப்போது திருமூலராக புதுப்பிறவி எடுக்கும் மூலனை பற்றி காண்போம் . சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த மூலன் ஒரு அபூர்வ மான மனிதன் . அன்பும் மனிதநேயமும் மிகுந்தவன் . அங்குள்ள எல்லா பசுக்களையும் மேய்த்து பாதுகாப்பவன் . அவன் பால் ஐந்து அறிவு கொண்ட அந்த ஜீவன்கள் காட்டும் நன்றியும் அன்பும் யாரையும் வியக்க வைக்கும் . அவ்வூர் மக்கள் அவனிடம் தங்கள் பசுக்களை ஒப்படைத்து விட்டு கவலையற்று இருந்தனர் . அவனும் அவன் மனைவியும் அவைகளை தங்கள் குழந்தைகளைப்போல் பாதுகாத்து வந்தனர் .
No comments:
Post a Comment