ஒரு நாள் சேரமானார் பூஜை முடித்து வெகு நேரம் ஆகியும் சலங்கை ஒலி கேளாததால் மிக துக்கமுற்று தன்னை மா.ய்த்துக்கொள்ள முனைகிறார் . அப்போது ஈசன் அவரிடம் தில்லையில் சுந்தரர் பாடிக்கொண்டிருந்த பதிகங்களை கேட்டு தான் மெய் மறந்து போனதே கால தாமதத்திற்கு காரணம் என்று விளக்குகிறார் . இதை கேட்ட சேரமானார் சுந்தரர் மீது மிகுந்த பக்தி கொண்டார் . அவருடைய மற்ற பெருமைகளையும் கேட்டு உணர்ந்து அவருடைய பக்தி வெகுவாக உயர்ந்தது . உடனே அவரை காண திருவாரூர் விரைகிறார் . இருவரும் சேர்ந்து பல சிவாலயங்களை தொழுது நிறைய பதிகங்கள் பாடி மகிழ்ந்தனர் . தம்பிரான்தோழன் என பெருமை பெற்ற சுந்தரர் சேரமான் தோழனாகவும் ஆகிறார சே ரமாநாரும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார் .
No comments:
Post a Comment