சுந்தரர் திரு ஓணகாந்தன்தளி என்னும் தலத்தை அடைந்து அந்த ஈசனை உரிமையுடன் பாடி நிதி பெற்று வருகிறார் . இவை எதுவுமே சொந்த தேவைக்காக பெறவில்லை . பொதுநல தேவைக்கே . இவை சுந்தரர் நிதி பெற்ற சம்பவங்கள் . ஆனால் ஈசன் குறிப்பறிந்து அவருடைய பசி ஆற்றிய சம்பவங்கள் மெய் சிலிர்க்க வைக்கும் . அவர் இதை உருகி பாடி இருக்கிறார் . பல கோயில்களை வழிபட்டு பிறகு அவர் தன் அடியார்களுடன் சம்பந்தமூர்த்தி பிறந்த இடமான சீர்காழி வந்தடைகிறார் . ஈசனை பாடி துதித்து மிகவும் களைப்படைந்து வெளியே வந்தனர் . அங்கு ஒரு முதியவர் ஒரு பந்தலில் எல்லோரையும் அமர செய் து அமுது படைத்தார் . எல்லோரும் உண்டு உறங்கி எழுந்த போது பந்தல் எல்லாம் மாயமாக மறைந்து விட்டிருப்பதை கண்டு அமுது படைத்தது ஈசன் என்பதை உணர்ந்து அவருடைய நெகிழ்ச்சி சொல்ல வார்த்தை இல்லை .இதற்க்கெல்லாம் மேலாக ஈசன் திருக்கச்சூரில் ஆடிய திருவிளையாடல் சுந்தரர் மேல் அவர் கொண்ட பாசம் நன்றாக விளங்கும் . சுந்தரர் அடியார்களுடன் மிகுந்த பசியுடன் திருக்கச்சூர் அடைந்த போது ஈசன் அந்தணர் வடிவில் தோன்றி அந்த பிராம்மணர்கள் இல்லங்களிலிருந்து உஞ்ச விருத்தி செய்து அமுது படைக்கிறார் . ஈசனின் அன்புதான் என்னே ?
No comments:
Post a Comment