கண் பார்வை இழந்தாலும் திருவாரூர் ஈசனை காணும் ஆவல் குறை யாதவராய் அடியார்களுடன் பல சிவதலங்களை சே வித்தவாறே யாத்திரை தொடங்குகிறார் .கடைசியாக காஞ்சி வந்தடைகிறார் . காமாக்ஷி அன்னையை மனமுருக வேண்டிக்கொண்டு ஏகாம்பரேஸ்வரர் முன் மண்டியிட்டு ஈசனை காணும் பாக்கியம் பெற கண்ணொளி வேண்டுகிறா ர் ..ஈசன் பெரும் கருணையால் ஒரு கண்ணில் ஒளி பெறுகிறார் . நன்றி பெருக்குடன் அவரை வாயார பாடி துதிக்கிறார் . பிறகு பயணத்தை . தொடர்கிறார் . கடைசியாக திருவாரூர் வந்தடைகிறார் . பலகாலம் பிரிந்த நண்பனை காணும் மனம் எத்தனை ஆனந்தம் அடையுமோ அத்தனை ஆனந்தத்துடன் அவரை தரிசிக்க வருகிறார் . அவரை உரிமையுடன் (மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே !) என்று பாடுகிறார் .ஈசன் பிரிய நண்பனை கைவிடுவாரா ? உடனே மற்றைய கண் ஒளியையும் பெறுகிறார் .
No comments:
Post a Comment