பொற்தாளம் பெற்ற ஞானசம்பந்தப்பெருமான் தாளத்துடன் ஐயனை பல ஆலயங்களில் பல பதிகங்கள் பாடி மகிழ்ந்தார் . அவருக்கு தில்லை அம்பலக்கூத்தனை காண பேராவல் உண்டாயிற்று . தந்தையும் அவராசையை நிறைவேற்ற தில்லைக்கு புறப்பட்டார் . கொள்ளிடம் நதியை கடந்து தில்லையை நெருங்கும் போதே அந்தண ப்பெருமக்கள் செய்யும் யாக புகையும் மந்திர கோஷங்களும் வானுயர நின்ற கோபுரங்களும் அவரை மெய்சிலிர்க்க வைத்தது . விழுந்து வணங்கினார் . அவர் வரவை எதிர்பார்த்து தில்லை மூவாயிரவர் அவரை வரவேற்க மேளதாளத்துடனும் வேத கோஷங்களுடனும் காத்திருந்தனர் . அவரை உள்ளே அழைத்து சென்றனர் . சம்பந்தர் பொன்னம்பல வாணனை மனம் குளிர சேவித்து பதிகங்கள் பாடி மகிழ்ந்தார் . மனநிறைவோடு வெளியே வந்து அவருக்கு சேவை செய்யும் பேறு பெற்ற மூவாயிரவர் வாழும் வீதிகளை வணங்கி வலம் வந்தார்
No comments:
Post a Comment