Tuesday, 23 October 2018

 சின்னஞ்சிறு   பாலகன்   செந்தமிழில்   ஐயன்   மீது   பதிகம்   பாடும் அதிசயம்    கண்ட     ஓங்கிய   சிவபாதவிருதயர்   கை   அப்படியே   நின்றது .   பிரமபுரம்   ஈசனே   பால்   ஊட்டியது   என   காண்பித்து விட்டு     கோயில்   வாயிலை   சேவித்துவிட்டு   ஞானபாலுண்ட   அச்சின்னஞ்சிறிய   பாலகன்   தோணியப்பர்   சன்னதிக்கு   சென்று   வணங்கி   பாடலை   தொடர்ந்தான் .  ஆனந்தமும்   அதிசயமும்   மேலிட   தந்தையார்   மெய்சிலிர்த்து   போனார் .    அவருக்கு   அத்தெய்வ   குழந்தையால்   சைவம்      தழைக்கும்   என்ற   நம்பிக்கை   மேலோங்கியது .  மகிழ்ச்சி   தாளவில்லை .  அதற்குள்   பச்சிளம்   பாலகன்   ஈசன்  அருள்   பெற்று   செந்தமிழ்   பதிகங்கள்   ஐயன்   மீது   பாடும்   அதிசயம்   ஊரெல்லாம்   பரவி   மக்கள்   கூட்டம்   கோவிலை   நோக்கி   வர   தொடங்கியது .  

No comments:

Post a Comment