குலம் விளங்க பிறந்த அத்தெய்வீக குழந்தை பெற்றோரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது . சிவபாதவிருதயர் குழந்தை பிறந்த இவ்வைபவத்தை கொண்டாட வேதியர்களை அழைத்து பலவிதமான தானங்களை செய்து அவர்களை மகிழ்வித்தார் .தகுந்த நாள் வந்ததும் ஊர் பெண்கள் கூடி குழந்தைக்கு ஆளுடை பிள்ளை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் . அவருக்கு ஊரில் நல்ல மரியாதை இருந்ததால் ஊரே ஆனந்தம் அடைந்தது . ஊரில் எல்லோருமே அக்குழந்தையை வளர்ப்பதில் பங்கேற்றனர் . இவ்வாறாக மூன்று ஆண்டுகள் ஓடின. கால் சலங்கை ஒலிக்க குழந்தை ஓடும் அழகு யாவர் மனதையும் கொள்ளை கொண்டது . அப்போது ஒரு நாள் சிவபாதவருதயர் நீராட திருக்குளத்திற்கு கிளம்பினார் . குழந்தை தானும் உடன் வரவேண்டுமென்று அடம் பிடித்தான் . தந்தையும் போகட்டுமென்று அழைத்து செல்ல தூக்கிக்கொண்டு கிளம்பினார் .
No comments:
Post a Comment