சிவபாதவிருதயர் குழந்தையை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றார் . குளத்தில் நீராட எண்ணி குழந்தையை குளக்கரையில் படியில் உட்கார வைத்துவிட்டு அவர் மூழ்கி குளிக்க எண்ணி குளத்தில் இறங்கினார் . குழந்தை அவர் குளிப்பதை கண்டு சிரித்து கொண்டு வேடிக்கை பார்த்தது . அவர் தண்ணீரில் அமிழ்ந்து குளிக்க எண்ணி தண்ணீரில் மூழ்கினார் . குழந்தை தந்தையை காணாமல் பயந்து அழ தொடங்கியது . எங்கும் தேடியும் தந்தையை காணாமல் ஆலய விமானத்தை நோக்கி அம்மா அப்பா என்று அழ தொடங்கினான் . குழந்தையின் அழுகை தோணியப்பர் செவிகளில் விழுந்தது . தன் பேரருளால் சிவபாதவிருதையருக்கு கிடைத்த பொக்கிஷம் அல்லவா அக்குழந்தை . அது அழுதால் பொறுப்பாரா ? உடனே உமை அன்னையுடன் தோன்றி அன்னையை குழந்தை ஞானமுடன் பிறக்க தவமிருந்த பெற்றோர் மனம் குளிர பாலுடன் ஞானத்தையும் கலந்து ஊட்டி விடும்படி பணித்தார் .
No comments:
Post a Comment