ஈசனிடம் பொ ற்த்தாளம் பெற்று அன்னை அருளால் அதில் லய ஓசை வரப்பெற்றதும் சம்பந்தரின் பெருமையை மேலும் உயர்த்தியது . அவனுடைய தாய்வழி பாட்டனாரின் ஊரான நனிப்பள்ளி மக்கள் அவரை தங்கள் ஊருக்கு வரவழைக்க மிக ஆவல் கொண்டனர் . தந்தையும் அவனை அங்கு அழைத்து சென்றார் . ஊர் மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் . மேலும் சுற்றி உள்ள திருத்தலங்களை சேவித்துக்கொண்டு ஊர் திரும்பினர் , இவரை பற்றி கேள்விப்பட்ட நீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவி விறலியாரும் அவரை காணும் பேராவலுடன் தோணிபுரம் வந்தனர் . அவர்கள் வருகையை கேள்விப்பட்ட சம்பந்தப்பெருமான் தானே சென்று அவரை வரவேற்று அழைத்து கொண்டுவந்து அமுது படைத்து மகிழ்ந்தார் . அவரை யாழ் வாசிக்க செய்து ஐயன் பதிகங்களை யாழில் கேட்டு பெரிதும் ரசித்தார் . விடை பெறும்போது நீலகண்டர் தன் மனதிலுள்ள பேராவலை தெரிவித்தார். ஆளுடைபிள்ளை எம்பெருமானை பாடும்போது தான் கூடவே இருந்து யாழ் வாசிக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் ஞானசம்பந்தரும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார் .
No comments:
Post a Comment