சம்பந்தர் எம்பெருமான் ஆனந்த நடனம் புரியும் தில்லையில் தங்க மனம் வராமல் திருவேட்களம் சென்று அங்கு தங்கி அங்கிருந்து தினம் தில்லை வந்து ஐயனை சேவிக்கலானார் . ஒருநாள் தில்லையில் அவர் ஒரு அரிய காட்சி கண்டா ர் . ஒரு கணம் மூவாயிரவர் சிவகணங்களாக காட்சி தந்து மெயசிலிர்க்க செய்தனர் . கூட வந்த பெரும்பாணருக்கும் அக்காட்சியை காட்டி அதிசயிக்க செய்தார் . அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அன்று அங்கு பதிகம் பாடும்போது அவ்வதிசய காட்சியையும் பாடினார் . ஈசனை வணங்கி விட்டு செல்லும்போது பாணர் சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி அவரை தாம் பிறந்த ஊரான எருக்கத்தம்புலியூர் மற்றும் நிவா நதிக்கரை சுற்றியுள்ள மற்ற திருத்தலங்களை சேவிக்க அழைத்தார் . சம்பந்தரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார் .
No comments:
Post a Comment