அன்னையும் குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டி மகிழ்கிறாள் . குழந்தை மகிழ்ந்து சிரிக்கிறது . ஈசனும் தேவியும் மறைக்கின்றனர் . திருகுளத்தில் நீராடி வெளியேறிய சிவபாதவிருதயர் குளப்படியில் குழந்தையை காணாமல் திடுக்கிட்டு போனார் . தேடி போனவர் பக்கத்தில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தையை கண்டார் . அவன் வாயில் பால் வழிவது கண்டு கோபம் மேலிட அவனை பார்த்து கோபத்துடன் யார் கொடுத்த பாலை உண்டாய் என்று கோபத்துடன் கையை ஓங்கினார் , உடனே மூன்று வயது பாலகன் கோபுரத்தை காண்பித்து தோடுடைய செவியன் விடையேறியோர் என்று செந்தமிழில் பதிகம் பாட துவங்கினான் .
No comments:
Post a Comment