Friday, 5 October 2018

சிவபாதவிருதயர்   பெயருக்கு   ஏற்ற வாறு   சிவபெருமானின்   பாதத்தை   ஒரு   கணமும்   மறவாது   த்யானிப்பவர் .  அவர்   மனைவியார்    பகவதியாரும்   கணவ.னுக்கு   சிறிதும்   குறையாமல்   எம்பெருமான்   மீது   அளவற்ற   பக்தி   கொண்டவர் .  கணவனுடைய   தெய்வீக   பணிகளில்   மிக்க   ஆர்வத்துடன்   பங்கு   கொண்டு   துணை   இருந்தார் .   இவ்வாறு   மனமொத்து   வாழ்ந்த   தம்பதிகளுக்கு   குறை   இருந்தது .   அவர்களுக்கு   மழலை   செல்வம்   இல்லாதது   குறை .  அப்போது   நாட்டில்   புற   சமயங்கள்   பரவி   இருந்தது .  தம்   மக்கள்   புற   சமயங்களுக்கு   மாறுவதை   பொறுக்காமல்   தினம்   தோணியப்பர்  முன்   சரணடைந்து   தன்   குறைகளை   அவரிடம்   கண்ணீர்மல்க   முறையிட்டு   வந்தார் .  கருணை   கடலான   ஐயன்   பக்தனின்   கண்களில்   நீர்   வருவதை   பொறுப்பாரா ?   ஐயன்   கண்   திறந்தார்.  பகவதியார்   கருவுற்று   பத்து   மாதங்களில்   சுப   யோகங்கள்   நிறைந்த   திருவாதிரை   நக்ஷத்திரத்தில   ஒரு      ஆண்   மகனை   ஈன்றாள் .

No comments:

Post a Comment