இவ்வாறு பெருமை வாய்ந்த தமிழ் நாட்டில் திருமுனைப்பாடி எனும் நாட்டில் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் என்று ஒரு அந்தணர் தம் மனைவி இசைஞானியாருடன் இல்லற நெறி தவறாத நல்ல தம்பதியினராக வாழ்ந்து வந்தனர் .அவர்கள் தவ புதல்வனாக சுந்தரர் பிறந்தார் . இவையெல்லாம் சுந்தரர் வரலாற்றில் விரிவாக சொல்லி இருக்கிறோம் . சுந்தரர் நம்பியாரூரன் எனும் பெயருடன் அங்கு வாழ்ந்தான் மூன்று வயது ஆனபோதே அவன் அழகிலும் அறிவிலும் மயங்கிய அரசன் நரசிங்க முனையார் அவனை வளர்க்க பிரியப்பட்டு அக்குழந்தையை அழைத்து சென்றார் . அவ்விவரங்கள் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம் . சுந்தரர் வளர்ந்து அவருக்கு திருமணம் நிச்சயிக்க பட்டபோது ஈசன் சுந்தரருக்கு வாக்களித்தபடி அவரை தடுத்தாட்கொள்ள முதியவராக வந்து ஓலையை காட்டி அவரை தன் அடிமை என்று வாதாடி திருவெண்ணைநல்லூர் அழைத்து சென்று அவரை தன் மனம் கவர்ந்த தம்பிரான் தோழனாக மாற்றியதையும் கண்டோம் .
No comments:
Post a Comment