மனுநீதி சோழன் கதை யாவரும் அறிந்ததே . தன் மகன் வீதி விடங்கன் தேரில் சென்ற போது இளம் கன்று ஒன்று வேகமாக ஓடிவந்து தேரின் சக்கரத்தில் அடிபட்டு மாண்டு போனது .விதிவிடங்கன் அதிர்ந்து போய் பெரும் வேதனைக்க்கு உள்ளானான் . தாய் பசு கண்ணீர் மல்க மன்னன் அரண்மனை முன்னே உள்ள ஆராய்ச்சி மணியை அடித்தது . மன்னனும் மனம் கலங்கி பசுவுக்கு தக்க நீதி வழங்க தன் மகனை வீதியில் படுக்கவைத்து அவன் மீது தேரை ஓட்டி கொல்லுமாறு ஆணை இடுகிறான் . அப்போது அந்த அதிசயம் நிகழ்கிறது . தர்மதேவதையே அக்கன்றாக வந்து அரசனின் பெருமையை உலகம் உணர இந்நாடகம் நடத்தியதாக அசரீரி வாக்கால் அறிந்து யாவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் . இவ்வாறு பெருமை மிக்க வரலாறு படைத்தது திருவாரூர் என்று உபமன்யு கூறுகிறார் . சுந்தரர் ஆரூர் ஈசனிடம் அளவு கடந்த பிரேமை கொண்டிருந்தார் . கைலாய பெண்ணான கமலினியும் அங்கே பறவை நாச்சியாராக பிறக்கிறார்
No comments:
Post a Comment